ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற மத்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவரின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (ஆகஸ்ட் 11) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள்
புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு.அன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மேலிட பொறுப்பாளர் குடந்தை.தமிழினி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷ்டமிட்டனர். இதில், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.