Rock Fort Times
Online News

வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் மாராடி கிராமத்தை சேர்ந்த 138 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர்களில் அஸ்வின் மனைவி சத்யாவும் ஒருவர். இலவச வீட்டுமனை பட்டா கடந்த 22-8 -2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் இலவச மனை பட்டாவை சத்யா பெற முடியாததால் மறுநாள் மாராடி கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சுமதியிடம் தனக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க கேட்டுள்ளார். அதற்கு சுமதி, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டுமனை பட்டா தருவதாக கூறியுள்ளார். இறுதியாக 7000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் சத்தியா இன்று (30-8- 2023) வி.ஏ.ஓ.சுமதியிடம் 7000 ரூபாய் லஞ்சம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்