Rock Fort Times
Online News

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முந்துகிறார் டிரம்ப்…!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவைப் போல் இல்லாமல் அங்கு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் முறை உள்ளது. அதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி  குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (24 மாகாணங்களில் வெற்றி) – (51.4 சதவீதம் வாக்குகள்) பெற்றுள்ளார்.  ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 192 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (15 மாகாணங்களில் வெற்றி) – (47.2 சதவீதம் வாக்குகள்)  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்