Rock Fort Times
Online News

உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்ப உற்சவம் கண்டருளினார். இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் இரவு மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்