Rock Fort Times
Online News

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… முதல் 10 இடத்தில் 2 பேர் தமிழ்நாடு மாணவர்கள்!

2025ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று( மார்ச் 6) வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வை தொடர்ந்து நேர்காணல் முடிந்தநிலையில், இன்று முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 958 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்காக (IAS, IPS, IFS)பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2ம் இடமும், ராஜா மொகைதீன் 7ம் இடமும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு சென்னையைச் சேர்ந்த பி. சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23-வது இடத்தைப் பிடித்து தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றார். தேர்வர்கள் தங்கள் முடிவுகளை யுபிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (upsc.gov.in) பார்க்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்