இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் பிரதான சேமிப்பாக இருந்து வருகிறது. உலகெங்கிலும் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கம் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து ரூ.51 ஆயிரத்திற்கு வந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று(17-10-2024) ஒரு கிராம் தங்கம் ரூ.7,160 க்கும், ஒரு பவுன் ரூ.57,280க்கும் விற்பனையாகிறது. இதன் விலை மேலும் உயர்ந்து ஒரு பவுன் ரூ. 58 ஆயிரத்துக்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் உள்ளனர்.

Comments are closed.