திருச்சி மாநகராட்சி 32, 33-வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 32, 33 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார். முகாமில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு .மதிவாணன், மாநகராட்சி துணை மேயரும், 33-வது வார்டு கவுன்சிலருமான திவ்யா தனக்கோடி, 32-வது வார்டு கவுன்சிலரும், கோட்ட தலைவருமான ஜெய நிர்மலா, பகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முகமது, வட்டச் செயலாளர்கள் தனக்கோடி, சுரேஷ், முகேஷ்குமார், எடிங்டன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.