திருச்சி திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த இரண்டு பேரை தனிப்படைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் மருத்துவ பயன்பாட்டிற்கான மாத்திரை மற்றும் ஊசிகளை சிலர் போதை பயன்பாட்டிற்கு விற்பதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் (36), காட்டூர் அன்னதாசன் தெருவை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (22) ஆகிய இருவரிடம் சோதனை நடத்தினர். இருவரும் மாத்திரை மற்றும் ஊசிகளை விற்பனை செய்தபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்கள். அவர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அவர்கள் இருவரையும் வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.