பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம்…! * ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி ஏற்றுக்கொண்டார்!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் பொது, பிஎஸ்சி பயோ டெக்னாலஜி, பிஏ எக்கனாமிக்ஸ், பிஏ பொலிடிகல் சயின்ஸ் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு சேரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் முழுவதையும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும், ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த செலவில் செலுத்துவதாக அறிவித்துள்ளார். “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தாலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார், புரட்சிக்கவி பாரதி. அவரது பாடல் வரிகளுக்கு ஏற்ப என்.கிருஷ்ணமூர்த்தி இந்த கல்வி கட்டணம் செலுத்துதல் முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார். அரசியல் கட்சியை தாண்டி அவரது இந்த நற்செயலுக்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் என். கிருஷ்ணமூர்த்திக்கு திருச்சி “ராக்போர்ட் டைம்ஸ்” வார இதழ் நிர்வாகமும் தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இதுகுறித்து மேலும் தகவல் தேவைப்படுவோர் 97868 52393 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் கே.என். நேருவின் சகோதரி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.