நாமக்கல் மாவட்டம் பட்லூர் அடுத்த சாலப்பாளையம் குடித்தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் யுவராஜ்( 29) . இவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2ம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் சொந்த வேலையாக பெரம்பலூர் வரை செல்வதற்காக தனது காரை யுவராஜ் ஓட்டி சென்றார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் மேம்பாலத்தின் அருகே சென்ற போது முன்புறம் சென்ற சிமெண்ட் லாரியை முந்தி செல்ல முயன்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த காா் , முன் சென்ற லாரி மீது தோதியது. மேலும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் காா் மீது மோதியது . இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிய யுவராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.