Rock Fort Times
Online News

திருச்சி அந்தநல்லூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதம்…!

கோடை வெயில் மக்களை வதைத்து வரும் நிலையில் திருச்சி புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்தநல்லூா் ஒன்றிய பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த 10 மாதமாக மழை இல்லாமல், கால்வாய்களில் தண்ணீரும் கிடைக்காமல் அந்தநல்லூா் ஒன்றிய பகுதிகளில் பெட்டவாய்தலை , பெருகமணி, சிறுகமணி, திருப்பராய்துறை, அணலை, கொடியாலம், புலிவலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் ஆழ்குழாய் பாசனத்தின் விவசாயிகள் வாழை பயிரிட்டு இருந்தனர்.

மழை பெய்யாதா என ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த மழை பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மழை இல்லாமல் கருகிய வாழை மற்றும் சூறை காற்றில் ஒடிந்த வாழைகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேன்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்