தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல, திருச்சியிலும் இன்று(12-10-2024) அதிகாலை முதல் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. பின்னர், மழை ஓய்ந்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்.12) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Comments are closed.