திருச்சி வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு…!
திருச்சி வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு புத்தூர் அருணா தியேட்டர் அருகே உள்ள பி.கே.ஹோட்டல் கோகுலம் மகாலில் நடைபெற்றது. இதில், தலைவராக எஸ்.வி.முருகேசன், கௌரவ தலைவராக எஸ்.மயில்வாகனம், செயலாளராக ஆர்.காளிமுத்து, பொருளாளராக எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், துணை தலைவர்களாக ஏ.பி.ரவி, எஸ்.நடராஜன், பி.கே.ஆனந்த், கே.ராஜேந்திரனும், துணை செயலாளர்களாக ஏ. ராஜன், எஸ்.திருநாவுக்கரசு, ஏ. பொன்ராஜ், டி.உஜ்ஜீவ வெங்கடேசன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்ட ஆலோசகர்களாக எஸ். மார்ட்டின், கே. குமார் ஆகியோரும், சங்க ஆலோசகர்களாக எம். ராஜசேகரன், எல்.தேவதாஸ் சாமுவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 31 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநகராட்சி “ட்ரேடு லைசென்ஸ்” எடுத்து வியாபாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Comments are closed.