Rock Fort Times
Online News

திருச்சி, வரகனேரி குழுமியானந்தா சுவாமிகளின் 125-வது குருபூஜை விழா…!

திருச்சி, வரகனேரியில் எழுந்தருளியுள்ள பிரம்மரிஷி குழுமியானந்தா சுவாமிகளின் 125-வது குருபூஜை விழா இன்று( மே 19) சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 6 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குருபூஜை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளுக்கு அபிஷேகமும், காலை 11 மணிக்கு மகா அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு “திருவடி தரிசனமும்” மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கின்றன. மாலை 6.30 மணிக்கு வீணை இசை கச்சேரியும், இரவு 7.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து நாட்டியாஞ்சலியும் நடைபெற உள்ளது. இந்த குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், வரகனேரி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்