Rock Fort Times
Online News

திருச்சி  வி.ஏ.ஓ., பெண் உதவியாளரை தாக்கியவருக்கு வலை….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி. கல்விக்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணன். கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.ஏ.ஓ. சரவணனை சந்தித்த நத்தமாங்குடி பகுதியைச் சேர்ந்த எழில்நிலவன் என்பவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைஞரின் அனைத்து மகளிர் உதவி திட்டத்தில் பணியில் இருப்பதால் 10 நாட்களுக்கு பிறகு  வருமாறு கூறியுள்ளார். இதனைதொடர்ந்து கல்விக்குடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எழில்நிலவன் சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சரவணன் இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எழில்நிலவன் கிராம நிர்வாக அலுவலர் சரவணனை தாக்கி உள்ளார். இதை தடுக்கச் சென்ற அவரது உதவியாளர் கோகிலாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து எழில்நிலவனை தேடி வருகின்றனர்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்