ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த திருச்சி உறையூர் காவல் ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ்… * சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் வழங்கினார்!
திருச்சி சிட்டி கமிஷனராக காமினி ஐபிஎஸ் பொறுப்பேற்றது முதல் கட்டப்பஞ்சாயத்து, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, பான் மசாலா, குட்கா விற்பனை, கஞ்சா, மற்றும் போதை ஊசி, போதை மாத்திரை விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். இதில், சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார். அந்தவகையில், அண்மையில் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்ற எதிரியை கைது செய்ததோடு அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 114 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை உறையூர் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் என்.ராமராஜன் பறிமுதல் செய்தார். அவரது சிறப்பான இந்த பணியினை பாராட்டி பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அவருக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதே போல சிட்டி பகுதியில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாருக்கும் பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அப்போது துணை கமிஷனர்கள் ஈஸ்வரன், சிபின் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.