திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீரங்கம் உபகோயிலான திருவெள்ளறை புண்டரிகாக்ஷப்பெருமாள் கோயில் வடக்கு வாசல் நிலை கோபுரத்தில் கூடுதல் ஐந்து நிலை கட்டுமான பணி துவக்க விழா இன்று ( 23.11.2023 ) நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் கலந்து கொண்டு கட்டுமான பணியினை துவக்கி வைத்தனா். இந்த கட்டுமான பணி ரூ. 7.85 கோடி மதிப்பில் நடைபெற உள்ளதாகவும் , மேலும் இப்பணி இன்று முதல் துவக்கப்பட்டு வெகு விரைவில் பணியை செய்து முடிக்க வேண்டும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.பி.ஏ செந்தில் கார்த்திகேயன், கோயில் பட்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.