திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நாளை(மார்ச் 30) தேரோட்டம்- ஏற்பாடுகள் தீவிரம்…!
திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா 48 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து பங்குனி தேரோட்டத்திற்காக 25-ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (30-03-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரருடன் 2 சிறிய தேர்கள் புறப்படுகின்றன. அதன் பின்னர் முதலாவதாக சுவாமி திருத்தேர் புறப்பாடும், இரண்டாவதாக அம்மன் தேர் புறப்பாடும் நடைபெறவுள்ளது. இதில், திருச்சி மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வே.சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
Comments are closed.