திருச்சி சுந்தர்நகர் 5-வது கிராசில் “மேன்ஹோல்” திறந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி – மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வது வார்டு, சுந்தர் நகர் 5-வது கிராஸ் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக
குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்ததும் தெருவில் உள்ள “மேன்ஹோலை” சரிவர மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தெரு மக்களில் சிலர் அந்த “மேன்ஹோல்” குழியில் யாரும் விழுந்து விடாதபடி ஒரு பெரிய கல்லை போட்டு வைத்துள்ளனர். இந்த மேன்ஹோல் திறந்தே கிடப்பதால் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பள்ளி வேன்களும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கடந்த ஓராண்டு காலமாக திறந்தே கிடக்கும் மேன்ஹோலை மூட மாநகராட்சி ஆணையர் சரவணன் முழு முயற்சி எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.