திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமாரின் தாயார் ப. முனியம்மாள் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குமாரின் தாயார் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி ப.குமாரின் அன்புத் தாயார் முனியம்மாள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் குமாருக்கும், அவர்தான் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.