திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது...
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சிறுகமணி பேரூராட்சி மற்றும் அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் பகுதி கழகத்திற்குட்பட்ட, பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை வகித்தார். பூத் கமிட்டி அமைக்கப்பட்ட நிலை குறித்தும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கையேடு ஆகியவை குறித்தும் மாவட்ட பொறுப்பாளர், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் புல்லட் ஜான், திருவரங்கம் பகுதி செயலாளர் சுந்தர்ராஜன்,
சார்பு அணி செயலாளர்கள் கண்ணதாசன், பாஸ்கர், விவேக், மல்லியம்பத்து ஸ்ரீதர், நடேசன், ரவிசங்கர், மருதை, சமயபுரம் ராமு.சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் செந்தில்,மனோகர்,சேகர், ஏகாம்பரம், செல்வம், எட்டறை அன்பரசு, திருச்சி போர்வெல். ரெங்கராஜ், முசிறி, மைக்கேல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.