தேசிய டேக்வாண்டோ போட்டியில் திருச்சி வீரர்- வீராங்கனைகள் 3 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் வென்று அசத்தல்..!
* அமைச்சர் அன்பில் மகேஷ், துரை வைகோ, கலெக்டர் சரவணன், கமாண்டன்ட் ஆனந்தன் பாராட்டு!
தெலுங்கானா ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில், ஹைதராபாத்தில் ஜூன் 24 முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 31 பேர் பங்கேற்றனர். இதில், திருச்சி வயலூர் சாலையில் உள்ள ஏகலைவன் பயிற்சி மையத்தின் மாணவர்கள் 15 பேர் பங்கேற்று
3 தங்கப்பதக்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த வீரர்,
வீராங்கனைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் எம். ஆனந்தன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர். அப்போது ஏகலைவன் இலவச தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மாஸ்டர் அலெக்ஸ் பாண்டியன், பயிற்சியாளர்கள் சித்ராதேவி, அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.