பொதுமக்களுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 3 கல்லூரி மாணவர்களை எச்சரித்த திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
திருச்சி, கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை கொள்ளிடம் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திடம் அழைத்து சென்றனர். அவர் அந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறியதுடன் அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இனிமேல் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
Comments are closed.