திருச்சி மாவட்ட காவல்துறைக்கு தமிழக அரசு சார்பில் புதிதாக 5 இருசக்கர ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை 5 காவலர்களுக்கு திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கி ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர்கள் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். முதல் கட்டமாக மதுர காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் தொட்டியத்திற்கு சென்று அங்கு இன்று( மார்ச் 1) முதல் ஒன்பதாம் தேதி ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். திருவிழா முடிந்ததும் திருச்சி மாவட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
Comments are closed.