திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஆகியோர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதுரை, சிவகங்கையை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் எஸ்.பி.வருண்குமார் குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல், சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்ததுடன், தனது புகழுக்கு களங்கம் விளைவித்த சீமான் ரூ.2 கோடி தர வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் அவரின் மனுவை ஏற்றுக் கொண்டதுடன் எஸ்.பி வருண்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்பேரில், எஸ்.பி. வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளி கிருஷ்ணனுடன் குற்றவியல் நீதிமன்றம் எண்- 4 நீதிபதி பாலாஜி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை கேட்ட நீதிபதி(பொறுப்பு) பாலாஜி வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Comments are closed.