அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வந்து பிறந்தநாள் விழா, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், கொண்டாடப்பட்டது . திருச்சி இ.பி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வன்னை அரங்கநாதன், மாமன்ற உறுப்பினர் செந்தில், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன் , லீலாவேலு, மாநகரக் கழக துணைச் செயலாளர் சந்திரமோகன், பொன்செல்லையா , சரோஜினி , துணை மேயர் திவ்யா ,மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா ,பகுதி கழகச் செயலாளர் பாபு மற்றும் மாவட்ட, மாநில, மாநகர ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் சேர்மன்கள் கலந்து கொண்டனர்.
