திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கிழக்கு சட்டமன்ற தொகுதியில், கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி அன்பில் தர்மலிங்கம் தெருவில் வார்டு எண்.64 பாகம் எண். 250- ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பயன்பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும், சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும், தவறுதலான போலியான வாக்காளர்களை நீக்கவும் துரிதமாக பணியாற்ற வேண்டும். இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர் கதிரவன், பகுதி கழகச் செயலாளர் மணிவேல், வட்டக் கழகச் செயலாளர் ஆனந்த் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.