திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ முகாம்…! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில், மருத்துவ அணி மாநில செயலாளர் எழிலன், நாகநாதன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, டாக்டர்கள் பால்வண்ணன், முகமது மன்சூர், சந்தோஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்த முகாம் நடைபெற்றது.


முகாமில், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த அளவு, இ.சி.ஜி, எக்கோ கார்டியோ கிராம், நுரையீரல் சோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமினை தொடர்ந்து மருத்துவத் துறைக்கு கருணாநிதி ஆற்றிய சேவைகளும், சாதனைகளும் குறித்த ஆங்கில கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் எழிலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.