தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்…!
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர திமுக சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் கிழக்கு மாநகரம் சார்பில் மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து காட்டூர் கடைவீதி, திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகர பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாநகர துணை செயலாளர் பொன் செல்லையா, பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே. கார்த்தி மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.