ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மலர்தூவி மரியாதை…!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ப.குமார், திருவெறும்பூர் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் அமைந்துள்ள அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுபத்ராதேவி, ஒன்றிய செயலாளர்கள் ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக், நகர செயலாளர் பாண்டியன், பகுதி கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments are closed.