முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துவரங்குறிச்சியில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட கழக செயலாளர் ப.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம், பொன்னம்பட்டி பேரூராட்சி செயலாளர் சாகுல் ஹமீது, கொட்டப்பட்டு சீனி, சாத்தனூர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் ராஜம்மாள், நல்லம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.