Rock Fort Times
Online News

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம் !

பெண்கள் குறித்து ஆபாசக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தற்போது திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, பாலியல் தொழிலாளி குறித்து கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார்.பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொளி தற்போது வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்