திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்சொரிதல் விழா துவங்குகிறது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழாவை சீரும் சிறப்பாக நடத்துவதற்காக சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி நடவடிக்கையாக, சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள 5 கிராம முக்கியஸ்தர்களை அழைத்து வருகின்ற 12.03.2023 தேதி அன்று பூச்சொரிதல் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் எனக்கூறி ஐந்து கிராமமான மகாலிக்குடி, மருதூர்,வி.துறையூர், மாடக்குடி, ஈஞ்சூர், நரசிக்குமங்கலம், செல்லாண்டி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவை மிக விமர்சையாக நடத்துவது என்றும், எந்த வித அசம்பாவங்களும் இல்லாமல் பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விழாவை சிறப்புற செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது எனவும் தொிவித்தாா்.
