தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொறுப்பாளராகவும், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் , பெரம்பலூர் ஆகிய மாவட்ட பார்வையாளராகவும் திருச்சி காந்தி மார்க்கெட் எஸ்.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலோடு வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ்ராஜா இவரை நியமனம் செய்துள்ளார். இவர் இதற்கு முன்பு மண்டல் இளைஞரணி செயலாளர், மண்டல் செயலாளர், இளைஞரணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட தலைவர், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் போன்ற பதவிகளில் திறம்பட செயல்பட்டுள்ளார். தற்போது மேற்கண்ட பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.