திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது…!
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து தில்லை நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கண்ணனை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து தில்லைநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கிற துரைசாமியை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகராஜ் என்பவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும் என எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, கொம்பன் ஜெகன் திருச்சி சிறுகனூரில் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை வைத்து தலைகள் சிதறும் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு சிறுவர்களை பிடித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.