திருச்சியில் சீருடை,அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஐ.ஜி கார்த்திகேயன் ஐ.பி.எஸ் தகவல்
மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடைபணியாளர்களின் வாரிசுகள், அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்காக வருகிற 25- ந்தேதி திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தற்போது சீருடைப்பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் 9498165533, 9345423925, 94430 94489 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த தகவலை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.