திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் வில்லியம் ( வயது 50).இவர் திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார் .இவரது கடைக்கு வந்த பொன்மலை கணேசபுரத்தைச் சேர்ந்த சோனி என்கிற பரத்குமார் என்ற வாலிபர் கத்தி முனையில் இவரை மிரட்டி பணம், இரண்டு மது பாட்டில்கள் ஆகியவற்றை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிந்து சோனி என்கிற பரத்குமாரை கைது செய்தார் .அவரிடம் இருந்து பணம் மது பாட்டில்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.