வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வருகிற 15-01-2024 (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள் சார்பில் இன்று(12-01-2024) பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதில், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக உறி அடிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார். அப்போது அவரது கண்கள் துணியால் கட்டப்பட்டது. பின்னர் அவர், பானையில் கட்டி இருந்த பூவை தட்டி விட்டார். அமைச்சருக்கு பின்பாக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஒரே அடியில் பானையை உடைத்தார். மேலும், தப்படித்து அனைவரையும் உற்சாகமூட்டினார். விழாவில், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.