திருச்சி மாநகர காவல்துறையினா், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் மற்றும் சங்கர் என்ற இரண்டு நபர்களையும், கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்களை காவலில் எடுத்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க மாநகர காவல் துறையின் 15 பேர் கொண்ட தனிப்படையினருடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பிவைத்தனர். ரத்தன் மற்றும் சங்கர் மீது 10 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்வதற்காக, தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். தமிழ்நாட்டில் திருடிய நகைகளை விற்று விட்டோம் என்றும், பணமாக கையில் வைத்திருக்கிறோம் என்றும் கொள்ளையர்கள் தரப்பில் கூறியுள்ளனர். தனிப்படை போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்ய முயற்சித்துள்ளனர். எனவே தனிப்படையை சேர்ந்த உதவியாளர் உள்ளிட்ட மூவர் ரெத்தன் மற்றும் சங்கர் ஆகியோரை திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டனர். மற்ற 12 போலீசார் பணத்தை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனிப்படையினர் மீது லஞ்சம் கேட்பதாக குற்றவாளிகளுள் ஒருவரான சானியா என்பவரின் சகோதரர்,காவல் நிலையத்தில் தனிப்படையினர் வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்பதாக அங்குள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர் வசம் புகார் கொடுத்துள்ளாா். இதனை அடுத்து தனிப்படையினரை ராஜஸ்தான் போலீசார் லஞ்ச வழக்கில் கைது செய்து விட்டனர். போலீசார் நகைகளை மீட்க போன இடத்தில் குற்றவாளியின் உறவினர் சொன்னதை நம்பி ரொக்கத்தை வாங்கும் போது திருச்சி போலீசாரை லஞ்ச வழக்கில் சிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யப்ரியா செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது அவா், திருச்சியில் 7 இடங்களில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 255 சவரன் நகை கொள்ளை போய் உள்ளது. திருச்சியில் மட்டும் 170 சவரன் கொள்ளை போனது. இது தொடர்பாக நகைகளை மீட்க கன்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் விரைந்தனர். தற்பொழுது 300 கிராம் மட்டுமே அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதி உள்ள நகைகளை மீட்பதற்கு காவல்துறையினர் முற்பட்டபோது இவர்கள் பணம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜஸ்தானில் புகார் கொடுத்து திருச்சி காவல்துறையினரை விசாரணை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளினர். இது குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ராஜஸ்தான் டி.ஜி.பியிடம் தொலைபேசியில் பேசி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தை எடுத்துக் கூறி தமிழ்நாடு போலீசார் லஞ்சம் வாங்கவில்லை, நகைகளை உருக்கி விற்றதன் மூலம் குற்றவாளிகள் வைத்திருந்த பணத்தை கைப்பற்ற போகும்போது தான், திருச்சி போலீசாரை லஞ்ச வழக்கில் குற்றவாளிகள் சிக்க வைத்துள்ளனர் என உரிய ஆவணங்களை கொடுத்து அனுப்பி தெரிவித்ததை அடுத்து, விசாரணைக்கு பிறகு தனிப்படையினரை ராஜஸ்தான் போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட திருச்சி போலீசார் விரைவில் திருச்சிக்கு வரவுள்ளனர் என்றும், போலீசார் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர் 5000 பேர் உள்ளனர். முக்கியமாக வடமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில் அவருடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சேகரித்து வைக்க வேண்டும் என ஆணையர் சத்யபிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.