திருச்சி மாநகர காவல்துறையில் பதிவான 1,192 வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காமப்பட்டு, ரூ.6.53 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பதிவாகி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த, தீர்வு காணும் வகையிலான வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை ( 13.05.2023 ) திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்தில்), திருச்சி மாநகர காவல்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 221 வழக்குகள், பொன்மலை 22, கே.கே.நகர் 80, ஸ்ரீரங்கம் 65, தில்லைநகர் 520, காந்திமார்க்கெட் 67, போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் 33, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் 184 உள்பட மொத்தம் 1,192 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட வழக்குகளில் அபராதம் விதிக்கும் வகையிலானவற்றுக்கு ரூ. 6,53,900 அபாரதமும் விதிக்கப்ப்டுள்ளது. இத் தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.