தமிழகம் முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் என். காமினி ஐபிஎஸ் இன்று ( 03.11.2023 ) மாநகர காவல் ஆணையரகத்தில் முதற்கட்டமாக 42 தற்காலிக பட்டாசு கடைக்கு உாிமங்களை வழங்கினார். மேலும் கடைகளில் பட்டாசு விற்பனை நேரங்களில் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். கடையின் முன்பு புகை பிடிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள கால அளவினை குறிப்பிட்டு அந்த நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறியும் வகையில் கடைக்கு முன்பு அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். கடையில் மின்சாரம் தடைபடும் போது அவசர கால மின்விளக்கு செயல்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீ அணைப்பான்கள் எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எதிர் எதிரே பட்டாசு கடைகள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும் திருச்சி மாநகரருக்குள் காவல்துறை மற்றும் பிற துறைகளின் முறையான அனுமதி பெறாமால் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்தினால், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.