தேசிய பாதுகாப்பு குழுமம் (NSG) மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படையுடன் திருச்சி மாநகர காவல்துறையினர் இணைந்து நடத்திய முக்கிய பாதுகாப்பு சம்மந்தமான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகர காவல்
ஆணையரக கூட்ட அரங்கில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா ஐ.பி.எஸ் தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு குழுமம் (NSG) சேர்ந்த 127 வீரர்கள் தமிழக கமாண்டோ படையைச்சேர்ந்த 40 வீரர்கள் கொண்ட குழு மற்றும் திருச்சி மாநகர காவலர்கள் கலந்து கொண்டு முக்கிய பாதுகாப்பு சம்மந்தமாக ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
