திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் வட மாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பிஜயா தாஸ், அவரது மனைவி பின்னி தாஸ், ஆகியோர் குடும்பத்தோடு திருச்சியில் தங்கி இருந்து பஸ் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பணியின் போது கழிவறைக்குச் சென்ற பிஜயா தாஸ் திடீரென மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி பின்னி தாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் , எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed, but trackbacks and pingbacks are open.