காவு வாங்க காத்திருக்கும் திருச்சி, ஓலையூர் ரிங்ரோடு… * பேரிக்கார்டு அமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை…!
திருச்சி கே.கே நகரில் இருந்து ஓலையூர் செல்பவர்களும், பஞ்சப்பூரிலிருந்து துவாக்குடி செல்பவர்களும் ஓலையூர் ரிங் ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டும். சமீப காலமாக இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், பஞ்சப்பூர் – துவாக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை அதிக வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஓலையூர் ரிங் ரோட்டில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் என்பதை குறிக்க எந்த சிக்னல்களும் அமைக்கப்படவில்லை. விட்டுவிட்டு ஒளிரும் மின்விளக்குகளும் இப்பகுதியில் இல்லாததால் ஜங்ஷன் இருப்பது தேசிய நெடுஞ்சாலை வழியாக கார்களில் வருபவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் மிக வேகமாக கார்களை ஓட்டி வருகின்றனர். அந்த நேரத்தில் கே.கே.நகரில் இருந்து ஓலையூர் செல்பவர்களும், ஓலையூரிலிருந்து கே.கே.நகர் செய்பவர்களும் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் பேரிக்கார்டு அமைத்தால் விபத்து அபாயத்தை தடுக்கலாம் என்பது வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாகும்.
Comments are closed.