திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள தரைக் கடைகளை அகற்றாவிட்டால் தீபாவளிக்கு பிறகு கடை அடைப்பு போராட்டம்- வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜுலு பேட்டி…!
திருச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக பகுதியாக உள்ள மலைக்கோட்டையை சுற்றி சிங்காரத்தோப்பு, சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, என்எஸ்பி ரோடு ஆகிய பகுதிகளில் பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.500-க்கும் மேற்பட்ட தரைக்கடைகளும் செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மலைக்கோட்டைக்கு செல்லும் வாசல் முகப்பு முதல் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நடக்கக்கூட வழியின்றி பொதுமக்கள் திணறி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் தரைக்கடைகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்களும், வியாபார சங்க நிர்வாகிகளும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜு கூறுகையில், என்எஸ்பி சாலையில் உள்ள தரக்கடைகளை அகற்றுவது குறித்து ஏற்கனவே மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் அந்த தரைக் கடைகளால் இந்த பகுதிகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வணிக நிறுவனங்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி வியாபாரம் இந்த ஆண்டு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழில் துறையினர் திருச்சியில் தொழில் தொடங்கவே தயங்குவார்கள். கேரளாவை போல் திருச்சியும் மாறிவிடும். அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். தரைக்கடை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி தந்து அந்த இடத்தில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரைக் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் கூட வர இயலாது. ஆகவே, தரைக்கடை வியாபாரிகளையும் வாழ வையுங்கள், எங்களையும் வாழ வையுங்கள். தரைக் கடைகளால் இந்த பகுதியில் இயங்கும் 2000 வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதில் 15 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலு,பொருளாளர் தங்கராஜ், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகர செயலாளர் ஏ1 ஹோட்டல் ஆறுமுக பெருமாள்,பொருளாளர் ஜானகிராமன்,மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி அப்துல் ஹக்கீம், மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதின், செயலாளர் திருமாவளவன் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில் பாலு, பொருளாளர் தங்கராஜ், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகர செயலாளர் ஏ1 ஹோட்டல் ஆறுமுக பெருமாள், பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி அப்துல் ஹக்கீம், மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதின், செயலாளர் திருமாவளவன் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.