Rock Fort Times
Online News

குடிநீரின் தரம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

திருச்சி மாநகராட்சி மண்டலம்-5 க்கு உட்பட்ட வார்டு எண்-11 காமாட்சி அம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் மற்றும் முதலியார் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் புகார் மனுவை தொடர்ந்து, மேயர் அன்பழகன் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீரில் குளோரின் அளவு குறித்து, மண்டல தலைவர், உதவி செயற்பொறியாளருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர் விஜயா ஜெயராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்