திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மனைவி இந்திரா (வயது 57 ). இவர் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாலாஜி ( 27 ). குடிபோதைக்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை பாலாஜி குடித்து விட்டார். பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.