பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி எம்.பி.துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை…!
தந்தைப் பெரியார் 147-வது பிறந்த நாளையொட்டி திருச்சி, காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு துரை வைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து “மதவாதம் மாயட்டும் சாதியவாதம் தொலையட்டும் மனிதநேயம் பரவட்டும்” பெரியாரின் புகழ் ஓங்கிட முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.
Comments are closed.