அனைத்திந்திய மாண்போர்ட் பள்ளிகளின் கூட்டமைப்பும், தேசியகல்விக் குழுவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான காணொலி நடனப்போட்டி காட்டூர் மாண்போர்ட் பள்ளி கலையரங்கில் இன்று ( 24.11.2023 ) நடைபெற்றது. மாண்போர்ட் சபையைச் சார்ந்த 21 பள்ளிகள் இந்த நடன போட்டியில் பங்கேற்றன. முன்னதாகமாண்போர்ட் சபையின் அகில உலகத் தலைவர் சகோதரர் ஜான். கல்லறைக்கல், அருட்சகோதரர் டாக்டர் எம். இருதயம் மற்றும் ஹைதராபாத் மாநிலத்தலைவர் சகோதரர் ஷைன் அலெக்ஸ் மற்றும் அனைத்து மாண்போர்ட் மாநிலத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இப்போட்டி நடத்தப்பட்டது.மாண்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் இராபட், பள்ளியின் நிர்வாகி அருட்சகோதரர் தனராஜ் மற்றும் துணைமுதல்வர் அருட்சகோதரர் கிறிஸ்துராஜா ஆகியோர் சிறந்த நடனக் குழுவைத் தேர்வு செய்ய வந்திருந்த நடுவர்களை பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவித்தனர். தமிழ்நாடு மட்டுமில்லாது , பெங்களூரு, ஹதராபாத் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் நடுவர் குழுக்கள் வருகை தந்து சிறப்பாக நடனமாடிய மாணவா்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு ஜீனியர், சீனியர் என பிரித்து முதல் மூன்று பரிசுகளும், வெகுமதியும் வழங்கப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.