திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த எம்.சத்திய பிரியா ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்.காமினி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ( 07.08.2023 ) போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாநகர கமிஷனராக ஏற்கனவே 32 அதிகாரிகள் பணியாற்றிய நிலையில் 33-வது கமிஷனராக காமினி பொறுப்பேற்றுள்ளார். இவர், திருச்சி மாநகரில் இரண்டாவது பெண் போலீஸ் கமிஷனர் ஆவார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.